காதலர் தினம்



என் தீராத பெருங்காதலை 
இந்த சிவப்பு ரோஜாக்களிள்
சேகரிக்க முடியாது..

என் சுவாசித்தில் நிறைந்துவிட்ட 
பேரன்பை இந்த இளஞ்சிவப்பு
பலூன்களிள் அடைக்க முடியாது..

காலங்கள் தாண்டிய காதலின் 
கணத்தை, கண்ணாடி பொம்மைகள் 
நிச்சயம் தாங்காது..

என் எல்லா செல்களிளும் 
நிறைந்துவிட்ட உன்னை 
வாழ்த்து அட்டைகளுக்குள்  
சுருக்க வாய்ப்பில்லை..

யுகங்கள் தாண்டி நீளூம் 
இந்த உணர்வை ஒரே 
நாளில் கொண்டாட எனக்கு 
சம்மதமில்லை..

உன் மை பூசிய விழிகள் 
என்னை ஊடுருவும் 
ஒவ்வொரு நொடிகளும் 
காதலின் நொடிகளே..

உன் செஞ்சாந்து விரல்கள் 
எனை தீண்டும் ஒவ்வொரு  
ஸ்பரிசமும் காதலின் ஸ்பரிசமே..

உன் சினுங்களிள் சிதறும் 
ஓசைகள் எல்லாம் 
காதலின் இசைகளே..

வெட்கத்தில் படரும் உன் 
வண்ணங்கள் ஒவ்வொன்றும்
காதலின் நிறங்களே..

உன் அருகாமையில் நகரும் 
எல்லா கணங்களும்
காதலின் கணங்களே..

நீ முத்தத்தால் நிறைத்த 
ஒவ்வொரு தினமும் 
"காதலர் தினமே"
                                                 

கருத்துரையிடுக

6 கருத்துகள்