ஐ லவ் யூ ரஸ்னா

 

"ஐ லவ் யூ ரஸ்னா "
இந்த வாக்கியத்தைப் படித்தவுடன்  ஒரு மங்கலான ஆரஞ்சு வண்ணம் உங்கள் முன் நிழலாடுகிறதா, உள்ளுக்குள் சட்டென்று குளிர்ச்சி பரவுகிறதா, அப்படி என்றால் நிச்சயமாய் உங்களின் 30 சதவீத கேசங்கள்  நரைத்திருக்கும்  கண்ணாடி கூட அணிந்திருப்பீர்கள் இன்னும் இளமையாக இருப்பதாகவே நம்பிக்கொண்டிருப்பீர்கள் சுருக்கமாக சொன்னால் நீங்கள்  எண்பதுகளின் நடுப்பகுதியில் பிறந்த ஆசீர்வதிக்கப்பட்ட தலைமுறையினர். ஆம் நண்பர்களே நம் தலைமுறைக்கென்றே உருவான பிரத்யேக பொருட்களுள் ரஸ்னாவும் ஒன்று. ஒரு குளிர்பானம் நம் நினைவுகளில் இத்தனை ஆழமாக பதிந்திருப்பது புறக்கணிக்க முடியாத ஆச்சரியம் தான். என் நினைவிற்கெட்டிய வரை  நாங்கள் கூறிய முதல் ஐ லவ் யூ ரஸ்னாவுக்கு தான். பெப்சி, கொக்கக் கோலா வருகைக்கு முன்னால் தனக்கென்று ஒரு தரமான இடத்தை பிடித்திருந்தது ரஸ்னா. சேமியா ஐசிலிருந்து நாங்கள் பெற்ற பரிணாம வளர்ச்சிதான் ரஸ்னா.  எவ்வளவு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அந்த இரண்டு ரூபாய்க்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டதே இல்லை. அப்பாக்கள் பொருளாதார தடை விதித்த போது அண்டை நாடான சித்தப்பாக்களிடம் உதவி கரம் நீட்டுவோம். சித்தப்பாக்கள் செவிசாய்க்கவில்லை என்றால் எங்கள் சிறுசேமிப்பில் கை வைத்துவிடுவோம். அதற்கும் வழி இல்லை என்றால் அந்நிய செலாவணி மோசடி தான், கிளாஸ் டெஸ்ட்க்கு வெள்ளை பேப்பர் வாங்க தந்த காசில் ஊழல் செய்வோம். பேப்பர் வாங்காமல்  சயின்ஸ் நோட்டு நடுபக்கத்தை கிழித்து எழுதியதற்கு கை சிவக்கும் வரை வாங்கின அடிகள் எல்லாம் பேப்பர் காசில் ரஸ்னா வாங்கிய  போது மறந்தே போகும்  அதுவும் அந்த ரெண்டு ரூபாய் பாக்கெட்டில் பேனாவால் கோடு போட்டு அளவு வைத்து  மூணு பேர் குடிப்பதெல்லாம் காவிரி நதி நீர் பங்கீட்டிற்கே சவால் விடும் காரியம். பெரும்பாலும், ரஸ்னா என்ன சுவை என தெரிவதற்கு முன்னமே குடித்து முடித்துவிடுவோம், எங்களை பொருத்தவரை  ரஸ்னாவை விட,  ரஸ்னா குடிக்க போகிறோம் என்ற உணர்வே போதுமான சந்தோஷத்தை கொடுத்துவிடும்.  இன்றும் ஆரஞ்சு வண்ணத்தை நினைவு படுத்த ரஸ்னாவை தவிர வேறெதுவும் தோன்றுவதில்லை ஏன் ஆரஞ்சு பழங்கள் கூட தோன்றுவதில்லை. ஆங்கிலம் பேச தெரிந்த ஒரே காரணத்தால் அறிவாளி என பீத்திக்கொள்ளும்  சில முற்போக்குவாதிகள்  "ஃபேன்ட்டா ஆரஞ்ச்சா"  என ஸ்டைலாக கேட்கும்போது கூட "ரஸ்னா கலரு" என்று தான் பதிலளிக்கிறேன். முதன் முதலில் ரஸ்னா குடிக்க தொடங்கியது முதல்  "பாலிதீன் கவர் அன் ஹைஜீனிக், கன்டாமினேடட் வாட்டர்னால த்தோரோட் இன்ஃபக்க்ஷன் வரும்" என்ற அதிமேதாவிகளின் அறிவுரையால் கடைசியாக ரஸ்னா குடிப்பதை நிறுத்திய வரைக்கும்  பாக்கெட் இரண்டு ரூபாய்க்கு தான் வாங்கினோம்.   இன்றைக்கெல்லாம் பீசா ஹட்டிலும், மேரி பிரவுனிலும் நூற்றியிருபது ரூபாய் கொடுத்து  சூட மிட்டாய் வாடை அடிக்கும் கிரீன் ஆப்பிள் மோஜிட்டோவையும் , ஆல்கிளியர் ஷாம்பூ நிறத்தில் உள்ள அந்த பெயர் தெரியாத  உற்சாக பானங்களையும் குடிக்கும் ஒரு துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படும் போதெல்லாம்  என் ஆழ்மனதில் இருந்து மிக மெலிதாக ஒலிக்கிறது 
"ஐ லவ் யூ ரஸ்னா"

கருத்துரையிடுக

17 கருத்துகள்

  1. என் ரஸ்னா காலத்திற்கு சென்று வந்தேன்.. அருமை Sir..

    பதிலளிநீக்கு
  2. 80 's mattum illa 2k kids um rasna kudichuirukom 😎😎 enakum atha orange colour rasna than favorite.....😋😋😋😋😋😋 ana.... all clear shampoo....😖😖. konjam yosichi irukalam ini kadai la poi cool drinks order panna shampoo 🤫🤫🤫than niyabagam varum

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Oh very happy to hear.. Rasna favourite for all.. but little special to us.. that's it..
      But andha All clear Shampoo naan unmaiya anubavitha incident.. so that's why wrote as it is..

      Thanks for comments.. Do support

      நீக்கு
  3. நூற்றியிருபது ரூபாய் கொடுத்து சூட மிட்டாய் வாடை அடிக்கும் கிரீன் ஆப்பிள் மோஜிட்டோவையும் , ஆல்கிளியர் ஷாம்பூ நிறத்தில் உள்ள அந்த பெயர் தெரியாத உற்சாக பானங்களையும் குடிக்கும் ஒரு துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படும் போதெல்லாம் என் ஆழ்மனதில் இருந்து மிக மெலிதாக ஒலிக்கிறதுஒலிக்கிறது... Same feeling sir

    பதிலளிநீக்கு
  4. மலரும் நினைவுகள் கண் முன் வந்து செல்கின்றன...❤️❤️❤️

    பதிலளிநீக்கு