பாட்டியும் கடிகாரமும்


மணி பார்க்க தெரியாத 
எங்க ஆயாவுக்கு 

பால்காரர் ஆரன் அடிச்சா 
மணி நாலு 
தண்ணி டேங்க் பூட்டி விட்டால் 
மணி அஞ்சு 
காலை பஸ்ஸு வந்தால் 
மணி ஏழு 
பள்ளிகூடத்துல மூனாம் பெல் 
அடிச்சா மணி ஒன்பது 
முத்தம்மா கெழவி புல்லறுக்க 
போனா மணி பத்து 
கூழ வால் மாடு கத்துனா 
மணி பதினொன்னு 
நடவு ஆள் கலைஞ்சா 
மணி பனிரெண்டு 
சத்துணவு தட்டோட பசங்க 
வந்தா மணி ஒன்னு 
ஐஸ்காரர் சாப்பிட வந்தா 
மணி ரெண்டு 
மாயவரத்தார் கடையில டீ 
போட்டால் மணி மூனு 
பள்ளிக்கூடம் விட்டா 
மணி நாலு 
கரண்டு நின்னு வந்தா 
மணி ஆறு 
பசி எடுத்தா மணி ஏழு 
கடைசி பஸ்ஸு எப்ப 
வந்தாலும் மணி எட்டு 

சாகுற வரைக்கும் மணி பார்க்க 
தெரியாமலேயே இறந்த எங்க ஆயா 
எப்போதும் எங்கிட்ட சொல்லும்

 "படிக்கிற புள்ள கையில 
கடிகாரம் கட்டிக்க சாமி" 

கருத்துரையிடுக

0 கருத்துகள்