என் மன்னிப்புகள் அனைத்தையும் மறுதளிக்கிறாய்..
நெருக்கமாக அமர்ந்தால்
முறைத்து பார்க்கிறாய்..
நெற்றி முடியை ஒதுக்க வந்தால்
முகத்தை திருப்புகிறாய்..
விரல்களை தொடுகையில்
வெடுக்கென்று இழுக்கிறாய்..
என் செல்ல சீண்டல்களை
அலட்சியம் செய்கிறாய்..
இருந்தும் மிக நீண்ட என்
கெஞ்சல்களுக்கு பின்னால்
அரங்கேறிய
அந்த நீளமான ஃபிரெஞ்சு முத்தத்தின் இறுதியில் நீ உதிர்த்த மௌன
புன்னகையில் புரிந்துகொண்டேன்
கோபமே வராமல் நீ
கோபப்பட்ட ரகசியத்தை..
1 கருத்துகள்
அருமை அண்ணா...
பதிலளிநீக்கு