மீண்டும் அதே நிலா



முன்வாசல்  கம்பிகளுக்கு இடையே 
நீண்டு படர்ந்திருக்கும் எறும்புகள் 
ஊறும் அந்த பலா மரத்தின் 
சிறு இலைகளை ஊடுருவி 
மஞ்சள் கோடுகளாய் தெரிகிறது 
பௌர்ணமி நிலா..

பெரிதாக எதுவும் வித்தியாசம் 
தெரியவில்லை..

பனிபடர்ந்த  மொட்டை மாடியில் 
நள்ளிரவைத் தாண்டி
அலைபேசிய எத்தனையோ 
இரவுகளை ஆக்கிரமித்த 
அதே நிலா...

உன் செல்ல கோபங்களுக்கு 
நான் முத்தங்களால் சமாதானம் 
செய்தபோது  வேடிக்கை பார்த்த 
அதே நிலா..

உனக்கான என் காதல் வரிகளை 
படித்துவிட்டு உன்னை போலவே 
கன்னம் சிவந்த அதே நிலா.. 
 
வரிவடிவங்கள் இல்லாத உன் 
சினுங்கள்களுக்கு அர்த்தங்கள் 
சொன்னபோது ஆச்சர்யபட்ட
அதே நிலா..

முத்தங்களோடு முடிந்த நம்
எல்லா இரவுகளையும் 
வெட்கத்தோடு ரசித்த 
அதே நிலா..

இறுக்கி அணைத்தபடி சென்ற
நம்  நெடுஞ்சாலை பயணங்களை 
பொறாமையோடு பார்த்த 
அதே நிலா..  

கடைசி சந்திப்பில் வார்த்தைகளை தொலைத்துவிட்டு  தனிமையில் 
நின்றபோது கண்ணீர் விட்ட 
அதே நிலா.. 

கண்ணீரோடு சில கவிதைகளயும் 
சோகங்களோடு சில நினைவுகளையும் உயிர்பித்ததை தவிர பெரிதாக 
எதுவும் வித்தியாசமில்லை  

மீண்டும் அதே நிலா...
                               

கருத்துரையிடுக

0 கருத்துகள்