நிழற்படமாய் படிந்திருந்தது நம் காதல்
உன் ஸ்பரிசத்தின் வெப்பத்தில் இதமாக
குளிர் காய்ந்தது நம் காதல்
உன் வியர்வை துளிகளிள்
சுகந்தமாய் பரவியது நம் காதல்
பறக்கும் உன் சேலை தலைப்பில்
வேகமாய் படபடத்தது நம் காதல்
எனக்காக நீ சமைத்த புளிக்குழம்பில்
காரமாய் ருசித்தது நம் காதல்
என் செல்ல தீண்டல்களை நீ ரசிக்கும்போது
வெட்கத்தில் சிவந்தது நம் காதல்..
நாம் சேர்ந்து சென்ற பயணங்களில் எல்லாம்
பின்னிருக்கையை ஆக்கிரமித்தது நம் காதல்
நீ பிரிந்த போது சிந்திய கண்ணீரில்
மூர்ச்சையாக முயல்கிறது நம் காதல்
உன் நினைவுகள் கடக்கும் போது அனிச்சையாய்
உதிரும் கண்ணீரில் நனைந்து போனது நம் காதல்
உன் கடைசி முத்தத்தின் ஈரத்தில் இன்றும்
உலராமல் வாழ்கிறது நம் காதல்..

4 கருத்துகள்
காதல்....
பதிலளிநீக்குநன்றிகள் பல
நீக்குஎங்கும் எதிலும் காதல்!!! அழகான வார்த்தை கோர்வை...
பதிலளிநீக்குநன்றிகள் தோழி..
நீக்கு