மழை

ஒரு மழைத்துளியின் பின்னணியில்தான் 

உன் முகம் எனக்கு அறிமுகம்.. 

ஒரு கோடை மழையின் சாரலில்தான் 

நாம் ரகசியமாய் பார்த்துக் கொண்டோம்..

ஒரு பின் அந்தி தூறலில் தான்

உன் பெயரை கூறினாய்...

ஒரு மழைக்காலத்து பயணத்தில்தான் 

முதல் முத்தத்தை பரிசளித்தாய் ..

ஒரு டிசம்பர் மாத மழைதான் 

நம்மை ஒன்றாய் நனைத்தது..

ஒரு பெரு மழையின் அதிகாலையில் தான் 

என்னை பிரிந்து சென்றாய்..

ஒரு நள்ளிரவின் மழைதான் 

என் கண்ணீரை கழுவியது..

இன்று கோடை மழையின் முதல்தூரல்  

தொடங்கியதும் சன்னல் கதவுகளை 

வேகமாய் திறக்கிறேன் கம்பிகளை தான்டி 

உள்ளே சிதறும் எல்லாம் துளியிலும் 

உன் நினைவுகளே..


கருத்துரையிடுக

2 கருத்துகள்