எதுகை மோனை தேவையில்லை..
யாப்பிலக்கணம் தெரியவேண்டாம்..
இலக்கியங்கள் படிக்க வேண்டாம்..
வார்த்தைகள் தேடி 
காத்திருக்க வேண்டாம்..
அடித்து எழுதி திருத்த அவசியங்கள் இல்லை..
எழுத்துக்களை எதிர்பார்த்து  
பேனாக்களிடம் சண்டை வேண்டாம்..
கற்பனைகளும் தேவையில்லை.
நம்மை சேர்த்து நனைத்த அந்த ஒற்றை 
மழைத்துளியே போதுமானதாய் உள்ளது 
கவிதைகள் உருவாக...